/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி ஆசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது
/
அரசு பள்ளி ஆசிரியருக்கு தமிழ்ச் செம்மல் விருது
ADDED : மார் 10, 2025 09:54 PM
விழுப்புரம்: வளவனுார் அரசு மேல்நிலை பள்ளி தமிழாசிரியர் முருகனுக்கு, 'தமிழ் செம்மல்' விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மாவட்ட அளவில் தமிழ் துறைக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் 'தமிழ் செம்மல்' விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ் செம்மல் விருது வழங்கும் விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்தது.
இதில் விழுப்புரம் அருகே வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணியாற்றி வரும் தமிழ் ஆசிரியர் முருகனுக்கு அமைச்சர் சாமிநாதன் 'தமிழ் செம்மல்' விருது மற்றும் ரூ.25 ஆயிரம் காசோலை, சான்றிதழ் வழங்கினார்.
விருது பெற்ற ஆசிரியருக்கு வளவனுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜூ மற்றும் சக ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்தினர்.