/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
/
திரவுபதி அம்மன் கோவிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
திரவுபதி அம்மன் கோவிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
திரவுபதி அம்மன் கோவிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
ADDED : மே 13, 2024 05:54 AM

செஞ்சி: பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா, திருத்தேர் உற்சவம் கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு வழிபாடும், சுவாமி வீதியுலா, மகாபாரத பிரசங்கமும் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் 11ம் தேதி துவங்கிய மகா பாரத சொற்பொழிவின் நிறைவாக நேற்று 12ம் தேதி காலை தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், அர்ஜூனன் வேடமிட்ட நாடக கலைஞர் இதற்கான பக்தி பாடல்களை பாடி தபசு மரம் ஏறினார்.
தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி முடிந்ததும் பெண்கள் தபசு மரத்தில் ஊஞ்சல் கட்டி குழந்தைகளை போட்டு தாலாட்டி நேர்த்தி கடன் செலுத்தினர்.
குழந்தை வரம் வேண்டிய பெண்கள் விரதமிருந்து தபசு மரத்தை வலம் வந்து வழிபட்டனர்.
இதில் செஞ்சி, பொன்பத்தி, அஞ்சாஞ்சேரி, மேல்எடையாளம், ஜம்போதி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.