/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணக்காரர்களுக்கு ஆட்சி நடத்தும் மோடிக்கு பாடம் புகட்டுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
/
பணக்காரர்களுக்கு ஆட்சி நடத்தும் மோடிக்கு பாடம் புகட்டுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
பணக்காரர்களுக்கு ஆட்சி நடத்தும் மோடிக்கு பாடம் புகட்டுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
பணக்காரர்களுக்கு ஆட்சி நடத்தும் மோடிக்கு பாடம் புகட்டுங்கள் அமைச்சர் மஸ்தான் பேச்சு
ADDED : ஏப் 03, 2024 10:58 PM

செஞ்சி: பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தும் மோடிக்கு பாடம் புகட்ட இந்தியா கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள் என அமைச்சர் மஸ்தான் பேசினார்.
மேல்மலையனுார் ஒன்றியம் பெருவளூர் கிராமத்தில் ஆரணி தொகுதி தி.மு.க., வேட்பாளர் தரணிவேந்தனுக்கு அமைச்சர் மஸ்தான் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர்பேசியதாவது.
முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்குமான முதல்வர்.பெண் பிள்ளைகள் உயர் கல்வி படிக்க மாதம் 1,000 ரூபாய் தந்தவர் ஸ்டாலின். ஆனால் மோடி நம் வீட்டு பிள்ளைகள் டாக்டராவதையும், இன்ஜினியர் அவதையும் தடுக்க புதுப்புது தேர்வுகளை கொண்டு வருகிறார்.
நீட் தேர்வை கொண்டு வந்து நம் வீட்டு பிள்ளைகள் டாக்டராவதை தடுத்து வருகிறார். மோடி, அதானி, அம்பானியின் 25 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறார்.
பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தும் மோடிக்கு பாடம் புகட்ட தி.மு.க., வேட்பாளர் தரணி வேந்தனுக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு அமைச்சர் மஸ்தான் பேசினார்.
இதில் மாஜி எம்.எல்.ஏ., செந்தமிழ்செல்வன், தேர்தல் பொறுப்பாளர் அன்பழகன், ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், நாராயணமூர்த்தி, சாந்தி சுப்பிரமணியன், துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர் செல்லி ராமசரவணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், தேர்தல் பொறுப்பாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மஸ்தான், வேட்பாளர் தரணிவேந்தனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

