
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவியர் பேரவை சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது.
விழாவிற்கு, இ.எஸ்., கல்விக்குழும நிர்வாக தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் இணைச் செயலாளர் நிஷா செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். ஆசிரியர்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து, கல்லுாரி முதல்வர் அகிலா சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆசிரியர்களுக்கான திறன்சார் போட்டிகள் நடந்தது. முன்னதாக மாணவர் பேரவைத் தலைவி சுவேதா வரவேற்றார். துணைத் தலைவி அஜீமா நன்றி கூறினார்.