தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழில்நுட்ப ஜவுளி பயிற்சி

தொழில்நுட்ப ஜவுளி பயிற்சி

தொழில்நுட்ப ஜவுளி பயிற்சி


ADDED : ஆக 29, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2024 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: தமிழக அரசு துணி நுால் துறை மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் சார்பில், ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

இந்தியாவில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புற மக்களுக்கு பெரியளவிலான வேலை வாய்ப்பு வழங்குவதில், ஜவுளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.

தமிழக துணிநுால் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக, தமிழக அரசு, துணிநுால் துறை மூலம் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (இருபாலர்கள்) தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கவுள்ளது. பயிற்சி பெற விரும்புபவர்கள், tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குனர், துணை இயக்குனர் அலுவலகம், துணிநுால் துறை, தான்தோன்றிமலை, கரூர்- 639 005, தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us