/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவிழா பிரச்னையில் கோவிலுக்கு பூட்டு; இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது
/
திருவிழா பிரச்னையில் கோவிலுக்கு பூட்டு; இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது
திருவிழா பிரச்னையில் கோவிலுக்கு பூட்டு; இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது
திருவிழா பிரச்னையில் கோவிலுக்கு பூட்டு; இரு தரப்பினர் மோதல்: 4 பேர் கைது
ADDED : ஆக 03, 2024 04:43 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கோவிலை பூட்டியதால் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவிவருகிறது. .
விழுப்புரம் அடுத்த வி.அகரம் காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 11ம் தேதி திருவிழா துவங்கி 11 நாள் நடந்தது. இந்நிலையில் நேற்று அதேபகுதியை சேர்ந்த மோகன்ராஜ்,41; மற்றும் அவரது நண்பர்கள் கோவில் தர்மகர்த்தாவான அதேபகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனிடம், திருவிழா கணக்கு கேட்டனர். மேலும், அடுத்தாண்டு திருவிழாவை 12 நாள் நடத்த வேண்டும் என்றனர். அதற்கு ரவிச்சந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
உடன் மோகன்ராஜ் தரப்பினர், இனி நாங்கள் திருவிழாவை நடத்திக் கொள்கிறோம், கோவில் சாவியை தருமாறு கேட்டனர். அதற்கு ரவிச்சந்தினர் மறுக்கவே, மோகன்ராஜ் தரப்பினர், நேற்று மதியம் கோவிலை மூடி, அவர்கள் கொண்டு வந்த 3 பூட்டுகளை போட்டு பூட்டினர்.
அதனை ரவிச்சந்திரன் தரப்பினர் கண்டிக்கவே இருதரப்பினரும் கல் மற்றும் உருட்டு கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இதனால் பற்றம் நிலவியது.
தகவலறிந்த டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். தொடர்ந்து, பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து இருதரப்பு புகார்களின் பேரில் தலா 9 பேர் மீது வழக்கு பதிந்து மோகன்ராஜ், செந்தில்நாதன்,40; கந்தன்,41; பாலு,36; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.