/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ்சில் இறந்த முதியவரின் உடலுடன் பேரன்களை நடுவழியில் இறக்கி விட்ட கொடூரம்
/
அரசு பஸ்சில் இறந்த முதியவரின் உடலுடன் பேரன்களை நடுவழியில் இறக்கி விட்ட கொடூரம்
அரசு பஸ்சில் இறந்த முதியவரின் உடலுடன் பேரன்களை நடுவழியில் இறக்கி விட்ட கொடூரம்
அரசு பஸ்சில் இறந்த முதியவரின் உடலுடன் பேரன்களை நடுவழியில் இறக்கி விட்ட கொடூரம்
UPDATED : செப் 10, 2024 08:20 AM
ADDED : செப் 10, 2024 06:54 AM

விழுப்புரம் : அரசு பஸ்சில் சென்றபோது இறந்த முதியவரின் உடலுடன், பேரன்களை நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீமாந்தாவி,60; அவரது பேரன்கள் அசோக்குமார் ஓயான்,19; கஜூனுகொடாபி,20; மூவரும் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள கால்நடை தீவனம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
இவர்கள், சொந்த ஊர் செல்வதற்காக, கடந்த 6ம் தேதி இரவு, விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் புறப்பட்டனர்.
பஸ் செங்கல்பட்டு புறவழிச் சாலையில் சென்றபோது, பீமாந்தாவி உடல் நிலை பாதித்து இறந்தார். இதனால், அவரது பேரன்கள் பஸ் டிரைவர் ராம்குமார், கண்டக்டர் பசூல்ரகுமான் ஆகியோரிடம், அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.
அவர்கள் பேசியதை புரிந்து கொள்ளாத டிரைவர், கண்டக்டர் இருவரும், இரவு நேரம் என்பதையும் பார்க்காமல், பீமாந்தாவி உடலையும், அவரது பேரன்களையும் நடுவழியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகியது.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட அரசு பஸ் டிரைவரான தற்காலிக ஊழியர் ராம்குமாரை பணிநீக்கம் செய்தும், கண்டக்டர் பசூல்ரகுமானை 'சஸ்பெண்ட்' செய்தும், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

