/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சிலை கரைத்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலி
/
விநாயகர் சிலை கரைத்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலி
விநாயகர் சிலை கரைத்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலி
விநாயகர் சிலை கரைத்த சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலி
ADDED : செப் 10, 2024 07:00 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன், குளத்தில் மூழ்கி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், ஆனத்துார் காலனி, பால்வாடி தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்,36; இவரது மகன் ஆதிகிருஷ்ணன்,12; அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், நேற்று காலை 8:00 மணிக்கு தனது வீட்டில் வழிபட்ட விநாயகர் சிலையை, கடலுார் மாவட்டம் புதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லையில் உள்ள நத்தம் கிராமம் ராமர் குளத்தில் கரைக்க கொண்டு சென்றார். சிலையை, குளத்தில் கரைக்க முயன்றபோது, தவறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.