/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தபால் ஓட்டு சேகரிக்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
/
தபால் ஓட்டு சேகரிக்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
தபால் ஓட்டு சேகரிக்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
தபால் ஓட்டு சேகரிக்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 02, 2024 06:10 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் சேகரிக்கும் பணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 10 ம் தேதி நடக்கிறது. தொகுதியில் 3,473 மாற்றுத்திறனாளிகள் ,2,304 முதியோர்கள் என மொத்தம் 5,777 பேர் தபால் ஓட்டுகள் போட தகுதியானவர்களாக உள்ளனர் .தொகுதியில் 7 குழுக்கள் அமைத்து தபால் ஓட்டுகள் வரும் 3 ம் தேதி வரை பெற உள்ளனர்.
நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி விக்கிரவாண்டி தொகுதி பாப்பனப்பட்டு, பனையபுரம் பகுதியில் தபால் ஓட்டுகள் பெறும் பணியினை துவக்கி வைத்தார். தொகுதி தேர்தல் நட த்தும் அலுவலர் சந்திரசேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் .