/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இடையஞ்சாவடிக்கு செல்லும் குறுக்கு சாலை மோசம்
/
இடையஞ்சாவடிக்கு செல்லும் குறுக்கு சாலை மோசம்
ADDED : மே 24, 2024 05:46 AM

வானுார்: இரும்பை ரோட்டில் இருந்து இடையஞ்சாவடி கிராமத்திற்கு செல்லும் குறுக்கு சாலை ஜல்லிகள் பெயர்ந்து, படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வானுார் அடுத்த இரும்பை ஊராட்சிக்குட்பட்ட இடையஞ்சாவடி கிராமத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிற்கு குதிரைப் பண்ணை வழியாக இரும்பை ரோடு செல்லும் குறுக்கு சாலை உள்ளது. 2 கி.மீ., துாரம் உள்ள இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
குறிப்பாக ஆரோவில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிகளவில் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், கூகுள் மேப்பைப் பயன்படுத்தி வெளிமாநிலங்களில் இருந்து ஆரோவில் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், இந்த சாலை வழியாக செல்கின்றனர். வெளிநாட்டினரும், ஆரோவில் பகுதிக்கு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை, சில ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. கடந்தாண்டு பெய்த கனமழையால், ஜல்லிகள் பெயர்ந்து சேதமடைந்தது.
சாலையில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டு மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுகின்றனர்.
இந்த சாலையை புதுப்பித்து தரக்கோரி இரும்பை ஊராட்சிக்குட்பட்ட இடையஞ்சாவடி கிராம மக்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.