sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அயலக தமிழர்கள் பங்கேற்ற கலாசார விழா உறியடித்து, கபடி ஆடி உற்சாகம் 

/

அயலக தமிழர்கள் பங்கேற்ற கலாசார விழா உறியடித்து, கபடி ஆடி உற்சாகம் 

அயலக தமிழர்கள் பங்கேற்ற கலாசார விழா உறியடித்து, கபடி ஆடி உற்சாகம் 

அயலக தமிழர்கள் பங்கேற்ற கலாசார விழா உறியடித்து, கபடி ஆடி உற்சாகம் 


ADDED : ஆக 15, 2024 05:35 AM

Google News

ADDED : ஆக 15, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: ஆலம்பூண்டியில் தமிழகத்திற்கு வேர்களை தேடி சுற்றுப்பயணம் வந்துள்ள அயலக தமிழர்கள் பங்கேற்ற கலாசார விழா நடந்தது.

அயலக தமிழர் நலத்துறையின் வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் 15 நாடுகளில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள் 100 பேர் 15 நாள் சுற்றுப்பயணமாக கடந்த 1ம் தேதி தமிழகம் வந்தனர்.

மாமல்லபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பயணம் செய்தவர்கள் நேற்று முன்தினம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டிக்கு வந்த அவர்களை கலெக்டர் பழனி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அங்குள்ள அரசு பள்ளியில் அயலக தமிழர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.

பிறகு அந்த குழுவினர் செஞ்சி கோட்டையை பார்வையிட்டனர். இவர்கள் பங்கேற்ற கலாசார விழா மாலை 5 மணிக்கு செஞ்சி ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்லுாரியில் நடந்தது.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கினார். ஆரணி எம்.பி., தரணிவேந்தன் முன்னிலை வகித்தார். இதில் தமிழர் விழாவான பொங்கல் பண்டிகையை நினைவு படுத்தும் வகையில் பொங்கல் வைத்தும், உறியடி திருவிழா, கபடி, கயிறு இழுத்தல் போட்டிகள் நடந்தன. நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்களுடன் சேர்ந்து அயலக தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இதில் அயலக தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், உதவி ஆணையர், புகழேந்தி, ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், மேல்மலையனுார் கண்மணி நெடுஞ்செழியன், பேரூராட்சி தலைவர்மொக்தியார் அலி, சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன், ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், கவுன்சிலர் கேமல், தாசில்தார் ஏழுமலை, ஊராட்சி தலைவர் முத்தம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us