/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மோடி தமிழகத்தின் மீது வைத்திருப்பது வேஷம் தான் வானுாரில் பொன்முடி ஆவேசம்

ADDED : மார் 25, 2024 05:21 AM

வானுார்: 'தமிழகத்தின் மீது மோடி பாசம் வைக்கவில்லை, வேஷம் மட்டுமே வைத்துள்ளார்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.
வானுாரில் நடந்த தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகம் செய்து, அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'தமிழகத்தின் திராவிட கொள்கை, தற்போது வட மாநிலங்களில் பரவிக்கொண்டிருப்பதற்கு காரணமானவர் முதல்வர் ஸ்டாலின் தான். 'இண்டியா' கூட்டணி உருவாக காரணமானவர் ஸ்டாலின். ஆனால் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் மோடி அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதற்கு உதாரணம் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்'. மோடிக்கு, தமிழ்நாடு மீது பாசம் கிடையாது, வெறும் வேஷம் தான். தமிழகத்தில் மழை வெள்ளத்தை பார்வையிட மோடி வரவில்லை. தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு இதுவரை ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை. மதவெறியை துாண்டிவிட்டு அரசியல் செய்கிறார்' என்றார்.