/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'மாஜி' அமைச்சர் வீட்டின் எதிரே வைத்த தி.முக., பேனர் நள்ளிரவில் அகற்றம் திண்டிவனத்தில் பரபரப்பு

ADDED : செப் 01, 2024 04:35 AM

திண்டிவனம், : திண்டிவனத்தில் மாஜி அமைச்சர் வீட்டின் அருகே வைத்த தி.மு.க., பேனர் அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், திண்டிவனத்தில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நேற்று காலை துவங்கியது. இதற்காக தி.மு.க., சார்பில் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சண்முகம் வீட்டின் அருகில் மெகா சைஸ் பேனர் வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., ஐ.டி., பிரிவில் அமைச்சர் மஸ்தான், பேனரை வைத்த விளையாட்டு அணி அமைப்பாளர் சந்திரனை மையப்படுத்தி சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்டனர். மேலும், இந்த பேனரால் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. அதனையொட்டி, நேற்று முன்தினம் இரவு மொட்டையர் தெருவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், பேனர் வைத்த தி.மு.க., பிரமுகருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, நள்ளிரவு 12:00 மணிக்கு, போலீசார் முன்னிலையில் பேனர் அகற்றப்பட்டது.