/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குளத்தில் மூழ்கி இறந்தவர் அடையாளம் தெரிந்தது
/
குளத்தில் மூழ்கி இறந்தவர் அடையாளம் தெரிந்தது
ADDED : மார் 06, 2025 03:07 AM
விழுப்புரம் : வளவனுாரில் குளத்தில் மூழ்கி இறந்தது, சென்னையைச் சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது.
வளவனுார் குமாரகுப்பம் பகுதியில் உள்ள புதுக்குளத்தில், நேற்று முன்தினம் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். வளவனுார் போலீசார் உடலை கைப்பற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், சென்னை, ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி ஜெயா, 48; என்பதும், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
கடந்த 1ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பாததால், அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், வளவனுார் புதுக்குளத்தில் இறந்து கிடந்தது, ஜெயா என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இது குறித்து, சண்முகம் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

