/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கமலக்கன்னியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
/
கமலக்கன்னியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கமலக்கன்னியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கமலக்கன்னியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED : மே 14, 2024 05:56 AM

செஞ்சி: செஞ்சி, ராஜகிரி கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி நேற்று கமலக்கன்னியம் மன், ராஜகாளியம்மன், பீரங்கிமேடு மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
மகா மாரியம்மன் கோவிலில் காலை 9:30 மணிக்கு சிறப்பு யாகமும், கொடி மரத்திற்கு கலச அபிஷேகமும் நடந்தது. பின், 10:30 மணிக்கு கொடியேற்றமும் மகா தீபாராதனையும் நடந்தது.
இதில் கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் பங்கேற்றனர்.
இன்று முதல் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜையும், சிறப்பு அலங்காரமும், இரவு வாண வேடிக்கையுடன், சுவாமி வீதியுலா, மேடை நாடகம், இன்னிசை கச்சேரி, தெருகூத்து போன்றவை நடைபெற உள்ளது.
வரும் 21ம் தேதி காலை 6:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், பிற்பகல் 2:30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும் நடைபெற உள்ளது.