sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை கலெக்டருக்கு முதியவர் உருக்கமான மனு

/

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை கலெக்டருக்கு முதியவர் உருக்கமான மனு

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை கலெக்டருக்கு முதியவர் உருக்கமான மனு

தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை கலெக்டருக்கு முதியவர் உருக்கமான மனு


ADDED : மே 28, 2024 05:42 AM

Google News

ADDED : மே 28, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : செஞ்சியை சேர்ந்த முதியவர், தனது மகனுக்கு தானமாக கொடுத்த சொத்தினை மீட்டுத் தருமாறு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

செஞ்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கண்ணன்,70; அவரது மனைவி கங்காபாய்,65; ஆகியோர் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, புகார் பெட்டியில் கலெக்டருக்கு கோரிக்கை மனுவை செலுத்தினர்.

அந்த மனுவில், முதியவர் கண்ணன் கூறியிருப்பதாவது: செஞ்சி கிருஷ்ணாபுரத்தில், எனது மனைவி காங்காபாய் இருவரும் வசித்து வருகிறோம். எனது மகள், மகன் ஆகிய இருவருக்கும் நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து கொடுத்து விட்டேன்.

இந்நிலையில், செஞ்சி- திருவண்ணாமலை சாலையில் உள்ள எனக்கு சொந்தமான திருமண மண்டபத்தின் வருவாய் மூலம் குடும்பம் நடத்தி வந்தேன்.

இந்நிலையில், எனது மகன், என்னையும், என் மனைவி மற்றும் அவரது சகோதரிக்கும் தேவையான வாழ்வாதாரத்தை செய்து கொடுப்பதாக உறுதி கூறி, எனக்கு சொந்தமான திருமண மண்டபத்தை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதனை நம்பி, கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி, எனது மகன் பெயருக்கு, திருமண மண்டபத்தை தான செட்டில்மெண்ட் எழுதி, கொடுத்துவிட்டேன்.

இந்நிலையில், என்னையும், எனது மனைவியையும் சரிவர கவனிக்காமல், எங்களுக்கான உணவு மற்றும் மருத்துவ செலவுக்குகூட உதவி செய்யாமல் கடமையை தவறிவிட்டார். இதனால், வயதான தம்பதிகளான நானும், எனது மனைவியும் குடும்ப செலவுக்கு பணமின்றி பிறரை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், மனமுடைந்து நாங்கள் இருவரும் தற்கொலை செய்வதை தவிர வேறுவழியில்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, எனது மகன் எங்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்து, எழுதி வாங்கிய திருமண மண்டப சொத்து தான செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us