/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காடகனுார் ஆதிதிராவிட மக்கள் இலவச மனை பட்டா வழங்க கோரிக்கை
/
காடகனுார் ஆதிதிராவிட மக்கள் இலவச மனை பட்டா வழங்க கோரிக்கை
காடகனுார் ஆதிதிராவிட மக்கள் இலவச மனை பட்டா வழங்க கோரிக்கை
காடகனுார் ஆதிதிராவிட மக்கள் இலவச மனை பட்டா வழங்க கோரிக்கை
ADDED : மே 15, 2024 11:32 PM

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அடுத்த காடகனுார் ஆதிதிராவிட மக்கள், இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று அப்பகுதி மக்கள் மனு அளித்து கூறியதாவது: கண்டாச்சிபுரம் தாலுகா காடகனூர் கிராம ஆதிதிராவிடர் காலனியில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என, பல முறை நாங்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், அந்த பகுதியில் நீண்டகாலமாக பாட்டை புறம்போக்கு இடத்தில் பயிரிட்டு வந்த தெரேசா, ஆரோக்கியதாஸ் ஆகியோரிடமிருந்து, 2 ஏக்கர் நிலத்தை, காலனி மக்களின் குடியிருப்புகளுக்காக வாங்கினோம்.
அந்த இடத்தில் 60 ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு, மனை பட்டா வழங்க சீர் செய்து, சர்வேயர் மூலம் அளந்து பிரித்து, கல்லும் நடப்பட்டது. இலவச மனையாக ஒப்படைக்கும் நேரத்தில், சிலர் புகார் தெரிவித்ததால், வருவாய்த்துறையினர் பணியை தடுத்து நிறுத்தி விட்டனர்.
முறையாக விண்ணப்பித்து, இலவச மனையாக பெற்றுக்கொள்ளுமாறு, அதிகாரிகள் அப்போது கூறினர். ஆனால், பல முறை விண்ணப்பித்தும், இது வரை இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பவில்லை.
இதனால், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து, 60 குடும்பத்தினருக்கு, அங்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென தெரிவித்தனர்.