/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வடமாநில தொழிலாளிகளை தாக்கியவர் கைது
/
வடமாநில தொழிலாளிகளை தாக்கியவர் கைது
ADDED : ஆக 01, 2024 07:21 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டமான பணியில் இரும்பு பொருட்கள் திருட்டை தடுக்க முயன்ற வடமாநில தொழிலாளர்களை தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 28ம் தேதி இரவு மர்ம நபர்கள் இரும்பு பொருட்களை திருட முயன்றனர்.
இதனை தட்டிக்கேட்ட வட மாநில தொழிலாளர்களை தாக்கி விட்டு தப்பியோடினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, கண்டமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பலராமன் மகன் பரணிதரன் 22; என்பவரை நேற்று கைது செய்தனர்.