ADDED : மே 15, 2024 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வயிற்று வலி காரணமாக முதியவர் பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, 70; குயவர். இவர், கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 13 ம் தேதி இரவு 9:50 மணியளவில் திடீரென வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 12:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.