/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ்சில் தவற விட்ட பணம், நகைகள் பயணியிடம் போலீசார் ஒப்படைப்பு
/
பஸ்சில் தவற விட்ட பணம், நகைகள் பயணியிடம் போலீசார் ஒப்படைப்பு
பஸ்சில் தவற விட்ட பணம், நகைகள் பயணியிடம் போலீசார் ஒப்படைப்பு
பஸ்சில் தவற விட்ட பணம், நகைகள் பயணியிடம் போலீசார் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 26, 2024 07:41 AM

திண்டிவனம் : பஸ்சில் பயணி தவற விட்ட பணம் மற்றும் நகைகளை ஒலக்கூர் போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
செஞ்சி அடுத்த மேல்மண்ணுார், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர், 45; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி நிஷாந்தி, 34; இருவரும், நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில், செஞ்சி பஸ் நிலையத்தில், சென்னை செல்லும் பஸ்சில் செல்வதற்காக தங்களுடைய உடமைகளை பஸ்சில் வைத்து விட்டு, கீழே பொருட்கள் வாங்குவதற்கு இருவரும் குழந்தையுடன் இறங்கினர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பஸ் புறப்பட்டு சென்றது தெரியவந்தது.
சங்கர் பஸ்சில் வைத்துள்ள உடமைகளில் 45 ஆயிரம் ரூபாய், வெள்ளிக் கொலுசு, ஒன்றரை சவரன் நகைகள் இருந்தன. இதனால் பதற்றமடைந்த சங்கர், செஞ்சி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
செஞ்சி போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பஸ் நெம்பர் குறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஒலக்கூர் போலீசார் பிற்பகல் 3:00 மணிக்கு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தினர்.
பின், பஸ்சில் பணியில் இருந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் எடுத்து வைத்திருந்த சங்கரின் உடமைகளை ஒலக்கூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒலக்கூர் போலீசார் உடமைகளை தவறிவிட்ட சங்கர் மற்றும் மனைவி ஆகியோரை நேரில் அழைத்து, பொருட்களை ஒப்படைத்தனர்.