/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சென்னை நபர் தவற விட்ட செயின் ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
/
சென்னை நபர் தவற விட்ட செயின் ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
சென்னை நபர் தவற விட்ட செயின் ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
சென்னை நபர் தவற விட்ட செயின் ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
ADDED : செப் 09, 2024 05:41 AM
செஞ்சி: செஞ்சியில் சென்னை பிரமுகர் தவற விட்ட 5 சவரன் நகையை ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டுக் கொடுத்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் வாசுதேவன் 45; இவர், நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு அனந்தபுரத்தில் நடந்த திருமணத்தில் பங்கேற்க செஞ்சிக்கு வந்தார். செஞ்சி நான்கு முனை ரோட்டில் பஸ்சுக்காக காத்திருந்த போது 5 சவரன் செயினை தவற விட்டார். உடனடியாக செஞ்சி போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் செஞ்சி கூட்ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் செஞ்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் கீழே கிடந்த செயினை எடுத்துச் சென்றதை கண்டறிந்தனர். உடன் அந்த பெண்ணை கண்டுபிடித்து, அழைத்து வந்தனர். போலீசார் முன்னிலையில், அந்த பெண், செயினை வாசுதேவனிடம் ஒப்படைதத்தார்.
புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் நகையை மீட்டு கொடுத்த போலீசாரை பொது மக்கள் பாராட்டினர்.