/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழிப்பறி கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது
/
வழிப்பறி கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 02, 2024 04:54 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடர் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட உத்தரபிரதேசம் மாநிலம், ராய்ப்பூர் நசீர் மகன் சதாப்,35; கஜிபுரா கிராமம் அனிஸ் மகன் இர்பான்,42; புதுடில்லி, ராஜீவ் நகர் அமீர்ஹூசைன் மகன் அலாவுதீன் (எ)அலி,27; ஆகியோரை விழுப்புரம் மேற்கு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதால், அவர்களது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையை ஏற்று, மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள மூவரிடமும் விழுப்புரம் மேற்கு போலீசார் நேற்று வழங்கினர்.