/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்
/
தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதம்
ADDED : ஜூலை 30, 2024 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமானது.
விக்கிரவாண்டி அடுத்த வி.மாத்துார் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வேணு மனைவி ரத்தினாம்பாள், 70; கூலித் தொழிலாளி.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வீடு தீப்பற்றி எரிந்தது. உடன் அலறியடித்து வெளியே ஓடி வந்தார். தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் 11 ஆயிரம் ரூபாய் எரிந்து சாம்பலானது.
விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர் தீ விபத்து குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

