ADDED : மார் 23, 2024 06:24 AM
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே எம்.சாண்ட் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து டிரைவர் இறந்தார்.
விழுப்புரம் அடுத்த திருவக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி மகன் சரண்ராஜ், 25; டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் மகன் சுகுமார், 27; நண்பர்கள். இருவரும் நேற்று மாலை 4:00 மணியளவில் திருவக்கரையில் இருந்து ஈச்சர் வேனில் எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு சென்னை - திருச்சி வழியாக சென்றனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதல், வேனை ஓட்டிச் சென்ற சரண்ராஜ், 25; சம்பவ இடத்திலேயே இறந்தார். சுகுமார் படுகாயமடைந்தார்.
புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

