ADDED : ஜூன் 04, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மயங்கி விழுந்து பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி, 35; திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சுமதி மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை சுமதி, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.