/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் மேம்பாலத்தில் சாலை போடும் பணி துரிதம் 13 ம் தேதி வாகன போக்குவரத்து துவக்கம்
/
திண்டிவனம் மேம்பாலத்தில் சாலை போடும் பணி துரிதம் 13 ம் தேதி வாகன போக்குவரத்து துவக்கம்
திண்டிவனம் மேம்பாலத்தில் சாலை போடும் பணி துரிதம் 13 ம் தேதி வாகன போக்குவரத்து துவக்கம்
திண்டிவனம் மேம்பாலத்தில் சாலை போடும் பணி துரிதம் 13 ம் தேதி வாகன போக்குவரத்து துவக்கம்
ADDED : ஏப் 11, 2024 04:58 AM

திண்டிவனம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், திண்டிவனம் மேம்பாலத்தில் புதிய தார் சாலை போடும் பணி துவங்கியது. வரும் 13 ம் தேதி வாகன போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் மேம்பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாவதால், மேம்பாலத்தை சீரமைப்பதற்காக ரூ.8.13 கோடி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பாலம் சீரமைப்பதற்கான பணிகள் துவங்கியது.
பாலத்தின் மேல்பகுதியில் நான்கு மார்க்கமாக செல்லும் சாலைகளில் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் சாலைகள் ஒவ்வொன்றாக சீரமைக்கப்பட்டது. கடைசி கட்டமாக செஞ்சி செல்லும் சாலை ஒரு மாதத்திற்கு முன் சீரமைக்கும் பணி துவங்கியது. இதனால் மேம்பாலத்திலிருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் சாலை அடைக்கப்பட்டது.
பாலம் சீரமைப்பு பணிகள் ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவது குறித்து, கடந்த 5ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற உடன், பாலத்தின் சீரமைப்பு பணிகளை கூடுதல் பணியாட்களை கொண்டு விரைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று செஞ்சி செல்லும் சாலை பகுதியில் புதியதாக தார் சாலை போடும் பணிகள் நடந்தது.
தற்போது தார் சாலை போடும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்து, வரும் 13 ம் தேதி, செஞ்சி மார்க்க சாலையில் வாகன போக்குவரத்து துவங்கி விடும்' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

