/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளர்கள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
/
தொழிலாளர்கள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தொழிலாளர்கள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
தொழிலாளர்கள் தீக்குளிக்க முயற்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
ADDED : ஆக 01, 2024 07:22 AM

விழுப்புரம்: கிணறு வெட்டிய பணிக்கு கூலி வழங்காததால் தொழிலாளர்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி தனது நிலத்தில் கிணறு வெட்டும் பணிக்காக சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளார்.
கிணறு வெட்ட கனஅடிக்கு 40 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இதை ஒப்புகொண்ட தொழிலாளர்கள், கடந்த 20ம் தேதி 50 தொழிலாளர்கள், கிணறு வெட்டும் பணியை துவங்கினர். ஒரு வாரத்தில் கிணறு வெட்டிய நிலையில், 91,532 கன அடிக்கான தொகையை கேட்டுள்ளனர்.
அவர்கள் கேட்ட தொகையை தராததால் கடந்த 27ம் தேதி, விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின், அந்த கிணற்றை பொதுப்பணி துறையினர், அளவீடு செய்து அதன் அறிக்கையை போலீசாரிடம் அளித்துள்ளனர். தற்போது வரை இந்த தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய கூலி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு, கோஷமிட்டனர்.
அதில், பாபு மனைவி புஷ்பாஞ்சலி, 35; மாரி மனைவி லட்சுமி, 55; சந்திரா, 35; தன்யா, 20; வீரன், 30; உள்ளிட்டோர் தங்கள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
உடன் பாதுகாப்பு போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின், அவர்களிடம் புகார் மனு அளித்து விட்டு செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்பேரில், அனைரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.