ADDED : மே 15, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மினி லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று காவணிப்பாக்கம் மலட்டாறு அருகே ரோந்து சென்றனர்.
அங்கு, ஆற்றில் அனுமதியின்றி மினி லாரியில் மணல் கடத்தி கொண்டிருந்த மூவரை போலீசார் பிடிக்க முயன்றனர்.
இருவர் தப்பிய நிலையில், ஒருவரை மட்டும் போலீசார் பிடித்தனர். அவர், விழுப்புரம் மணி நகரை சேர்ந்த முருகன் மகன் கமல்,20; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மணல் கடத்திய மினி லாரியை பறிமுதல் செய்தனர்.