/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எலக்ட்ரிக்கல் சர்வீஸ் கடையில் திருட்டு
/
எலக்ட்ரிக்கல் சர்வீஸ் கடையில் திருட்டு
ADDED : மார் 10, 2025 05:53 AM
வானுார்: வானுார் அருகே எலக்ட்ரிக்கல் சர்வீஸ் கடையில் மின் மோட்டார், காப்பர் கம்பிகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த அயன்வேலுாரைச் சேர்ந்தவர் மணிமாறன், 38; வானுார் அடுத்த திருவக்கரையில் மின் மோட்டார் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இந்த கடையை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் கடை திறந்தபடியே இருந்துள்ளது. கடந்த 6ம் தேதி இவர், கடையில் சர்வீஸ் வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு சென்று விட்டார். பின் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையில் வைத்திருந்த 3 மின் மோட்டார், 10 கிலோ காப்பர் கம்பி உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.