/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராக்டர் விற்பனை கடையில் திருட்டு
/
டிராக்டர் விற்பனை கடையில் திருட்டு
ADDED : மார் 28, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் டிராக்டர் விற்பனை கடையில் 70 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 50; இவர், விழுப்பரம் திருவாமாத்துார் சாலையில், தனியார் டிராக்டர் விற்பனையகம் நடத்தி வருகிறார். நேற்று காலை 10:00 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே கல்லா பெட்டியில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.
முருகன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

