/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏரியில் விழல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
/
ஏரியில் விழல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
ADDED : செப் 18, 2024 04:56 AM

வானுார் , : வானுார் அடுத்த கொடூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் விழல்புல் அதிகளவில் வளர்ந்துள்ளது. நேற்று இரவு விழல் புல் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. காற்று அதிகமாக வீசியதால் தீ மளமளவென பரவி எரிந்தது.
இது குறித்து அப்பகுதி மக்களும், கிளியனுார் போலீசாருக்கும், வானுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், நேற்று பவுர்ணமி என்பதால், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். பின், திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
இருப்பினும், ஏரியில் இருந்த விழல்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. ஒவ்வொரு ஆண்டும், மர்ம ஆசாமிகள் யாராவது, சிகரெட், பீடியை பிடித்து விட்டு தூக்கி வீசி விட்டு செல்லும் போது, விழல் எரிந்து விடுவது வழக்கம். இதே போன்று நேற்றும் மர்ம ஆசாமிகள் வீசிய சிகரெட் துண்டால், தீப்பிடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதனால் கொடூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

