/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் விழா

ADDED : ஆக 17, 2024 03:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி வரவேற்றார். பள்ளி தாளார் சோழன் முன்னிலை வகித்தார். மதுரை கள்ளர் சீரமைப்பு ( பள்ளிகள்) துறை இணை இயக்குநர் முனுசாமி தலைமை தாங்கி, மாணவர்களிடம் பட்டம் இதழை வழங்கி பேசுகையில், ' மாணவர்கள் பாடப் புத்தகங்களை படித்து அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வது போன்று, 'தினமலர் - பட்டம்' இதழையும் படித்து கல்வித் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் போட்டித் தேர்வுகளை தயக்கமின்றி எதிர்கொள்ள முடியும்' என்றார். இதில், வழக்கறிஞர் மனோ, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பிரித்திவிராஜ், துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி, ஆசிரியர்கள் தயாநிதி, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.