/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அண்ணாமலை மழைக்கால தவளை விக்கிரவாண்டியில் திருமாவளவன் விமர்சனம்
/
அண்ணாமலை மழைக்கால தவளை விக்கிரவாண்டியில் திருமாவளவன் விமர்சனம்
அண்ணாமலை மழைக்கால தவளை விக்கிரவாண்டியில் திருமாவளவன் விமர்சனம்
அண்ணாமலை மழைக்கால தவளை விக்கிரவாண்டியில் திருமாவளவன் விமர்சனம்
ADDED : ஜூன் 15, 2024 04:53 AM

விக்கிரவாண்டி: 'மழைக்கால தவளை போல கத்திக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை' என வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்ற வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பேசியதாவது:
'இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிவாவின் அறிமுக கூட்டமல்ல, வெற்றியை அறிவிக்கும் கூட்டம். தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் இக்கூட்டணி தொடர் வெற்றியை சந்தித்து வருகிறது.
மழைக்கால தவளை போல கத்திக் கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. வரும் 2026 வரை இக்கூட்டணி தொடரவேண்டிய தேவை உள்ளது. சிவாவின் வெற்றிக்கு வி.சி., தொண்டர்களின் தேர்தல் பணி மிக சிறப்பாக இருக்க வேண்டும். பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்றார்.
காங்., மாநிலத்தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், 'எத்தனை தேர்தல் வந்தாலும் இக்கூட்டணி தொடரும். 80 சதவீத வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.,வுடன் பா.ம.க., கூட்டணி சேர்ந்து சமூகநீதியை பறிகொடுத்துள்ளது' என்றார்.
அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் முதன் முதலில் வேட்பாளரை அறிவித்தார். தேர்தலில் பணியாற்ற பணிக்குழுவையும் நியமித்தார்.
ஆனால் மற்ற கட்சிகள் சிவாவை எதிர்த்து யாரை நிற்க வைப்பது என தெரியாமல் குழம்பி உள்ளனர். எதிர்த்து நிற்க ஆளே இல்லை.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி உறுதியாகிவிட்டது. இத்தேர்தலில் நம் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டிபாசிட் இழக்க வைக்கவேண்டும்' என்றார்.