/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்வேலியில் சிறுவன் பலி விவசாயிகள் 3 பேர் கைது
/
மின்வேலியில் சிறுவன் பலி விவசாயிகள் 3 பேர் கைது
ADDED : பிப் 28, 2025 12:52 AM

திருக்கோவிலுார்:மின்வேலியில் சிக்கி சிறுவன் இறந்த வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துார், காலனியை சேர்ந்தவர்கள் நவீன்ராஜ், 15, கோபி, 14. நண்பர்களான இருவரும் புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற நவீன்ராஜ் வீட்டு மாடுகள் இரவு, 7:00 மணி வரை வீடு திரும்பவில்லை. இதனால் நவீன்ராஜ், கோபி இருவரும் நெற்குணத்தில் மாடுகளை தேடினர்.
அப்போது, அப்பகுதி புவனேஸ்வரன், 34, என்பவரின் நெல் வயலுக்கு சென்றபோது, அங்கு காட்டுப்பன்றியிடமிருந்து பயிரை காக்க போடப்பட்டிருந்த மின்வேலியில் இருவரும் சிக்கினர். இதில், நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த கோபி, மொபைல் போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் கோபியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரகண்டநல்லுார் போலீசார், புவனேஸ்வரன், மின்வேலி அமைத்த கோபி, 42, காளிதாஸ், 30, ஆகியோரை கைது செய்தனர்.