
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ.,யில், நிறுவன தலைவர், காமராஜர் பிறந்த நாள் மற்றும் ஐ.டி.ஐ., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு என முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார். அரிமா சங்க மாவட்ட தலைவர்கள் குணசேகரன், பிரகாஷ், குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனிவேலு மெட்ரிக்குலேஷன் பள்ளி தாளாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.
அரிமா சங்கத் தலைவர் கமலக்கண்ணன், பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பழனிவேலு கல்வி நிறுவனத் தலைவர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் வாசுகி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.
இதில் ஐ.டி.ஐ., முதல்வர் நுார்முகம்மது, துணை முதல்வர் இளஞ்செழியன், பள்ளி மேலாளர் மஞ்சுளா, ஐ.டி.ஐ மேளாளர் செல்லம்மாள், பயிற்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அருண்குமார், சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
அரிமா சங்க செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.