/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா
/
தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா
ADDED : மார் 03, 2025 06:29 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட கைவினைஞர் முன்னேற்ற கட்சி சார்பில் தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முன் நடந்த விழாவிற்கு, மாநில அமைப்பாளர் உமாபதி தலைமை தாங்கி, தியாகராஜ பாகவதர் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். உயர்நிலைக்குழு உறுப்பினர் சூரியமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தியாகராஜ பாகவதர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, கைவினைஞர் முன்னேற்ற கட்சி சார்பில் நன்றி தெரிவித்தல். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு இசை பள்ளிகளுக்கும் தியாகராஜ பாகவதர் பெயரை சூட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செயலாளர் பிரபா சரவணன், தொழிற்சங்க தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, சிவப்பிரகாசம், இளைஞரணி பூவரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.