/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் கிளை சிறைச்சாலை ஜக்காம்பேட்டைக்கு அதிரடியாக மாற்றம்
/
திண்டிவனம் கிளை சிறைச்சாலை ஜக்காம்பேட்டைக்கு அதிரடியாக மாற்றம்
திண்டிவனம் கிளை சிறைச்சாலை ஜக்காம்பேட்டைக்கு அதிரடியாக மாற்றம்
திண்டிவனம் கிளை சிறைச்சாலை ஜக்காம்பேட்டைக்கு அதிரடியாக மாற்றம்
ADDED : ஆக 24, 2024 07:14 AM

திண்டிவனம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், திண்டிவனத்திலிருந்த கிளைச்சிறைச்சாலை, ஜக்காம்பேட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிளைச்சிறைச்சாலைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் அருகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கிளைச்சிறைச்சாலை குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து நீதிமன்றத்திற்கு பக்கத்திலேயே சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு காவலர் வீடு வசதி கழகத்தின் சார்பில், ரூ.8 கோடியே 39 லட்சம் செலவில், புதியதாக கிளைச்சிறைச்சாலை கடந்த 26.10.22ல் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை 19ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலம் புதிய கிளைச்சிறைச்சாலையை திறந்து வைத்தார்.
திறப்பு விழா நடந்து ஒரு மாதம் ஆகியும், திண்டிவனத்தில் செயல்பட்டு வந்த கிளைச்சிறைச்சாலையிலுள்ள விசாரணை கைதிகள் மாற்றம் செய்யப்படாமல் இருப்பது குறித்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன் 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து திண்டிவனத்தில் பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் செயல்பட்டு வந்த கிளைச்சிறைச்சாலை, ஜக்காம்பேட்டையிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு பக்கத்திலுள்ள புதிய கிளைச்சிறைச்சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டது.

