/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது டிப்பர் லாரி மோதல் 10 மாத குழந்தையுடன் தந்தை பலி திண்டிவனம் அருகே பரிதாபம்

ADDED : செப் 08, 2024 05:25 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதியதில் 10 மாத பெண் குழந்தையுடன் தந்தை இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டை அடுத்த மேல்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்,28; எலக்ட்ரீஷியன். இவரது மனைவி தீவலட்சுமி,22; இவர்களுக்கு தனுஸ்ரீ என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
சென்னையில் வேலை செய்து வந்த முத்துக்குமரன், விநாயகர் சதுர்த்திக்காக சொந்த ஊரான மேல்சிவிரிக்கு வந்துள்ளார். நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டிலிருந்து 'பஜாஜ் சிடி' பைக்கில் தணியல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மனைவி, குழந்தை தனுஸ்ரீ மற்றும் உறவினரின் குழந்தை புகழேந்தி,3; ஆகியோருடன் புறப்பட்டார்.
அப்போது, மேல்சிவிரி கிராமத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி, முத்துக்குமரன் பைக் மீது உரிசியது. அதில், நிலைதடுமாறி முத்துக்குமரன், குழந்தை தனுஸ்ரீ ஆகிய இருவரும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தீவலட்சுமி, புகழேந்தி ஆகிய இருவரும் மறுபக்கம் விழுந்ததால், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். லாரி டிரைவர் தப்பி ஓடினார்.
விபத்து குறித்து வௌ்ளிமேடுபேட்டை போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவர் ஞானசேகரை தேடிவருகின்றனர்.