/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
/
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 25, 2024 03:22 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் டிப்பர் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதித்தது.
சின்னபாபுசமுத்திரம் அடுத்த கொண்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் டிரைவர் குமார், 50. இவர் நேற்று காலை மதகடிப்பட்டிலிருந்து புதிய கரும்பு லோடு டிப்பர்கள் இரண்டை டிராக்டரில் இணைத்து எடுத்து சென்றார். நேற்று காலை 10:00 மணியளவில் டிராக்டர் டோல் பிளாசாவை கடந்து வராகநதி ஆற்றுபாலம் அருகே வந்தபோது , டிப்பரின் கொக்கி கட்டாகி, நடு ரோட்டில் கவிழந்தது. இதனால், போக்குவரத்து பாதித்தது.
தகவலறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, டோல் பிளாசா ஊழியர்கள் உதவியுடன் கிரேன் மூலம் டிப்பரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.