/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
/
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் திருத்தேர் உற்சவம்
ADDED : மே 13, 2024 05:57 AM

செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த திருத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 24ம் ஆண்டு மகா உற்சவம் மற்றும் 15ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் தேதி பூதேவி, ஸ்ரீதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்வசம் நடந்தது. 11ம் தேதி இரவு 11:00 மணிக்கு பூபல்லக்கு உற்சவம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்து சுவாமி தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
தொடர்ந்து மகா தீபாராதனையும், 10:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மச்சார் அம்மனை திருத்தேரில் எழுந்தருளினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி வடம் பிடித்தலை துவக்கி வைத்தார்.
வழக்கறிஞர் விஜய்மகேஷ், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், ஒன்றிய கவுன்சிலர் கோபால், பா.ம.க., மண் டல துணைச் செயலாளர் மணிமாறன், விழாக்குழுவினர் நாராயணசாமி, கணேசன் மற்றும் திராளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.
விழாவை முன்னிட்டு கடந்த 6ம் தேதி முதல் தொடர் அன்னதானம் நடந்தது.