/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
விழுப்புரத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 06:29 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச., செயலாளர் சேகர் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி கண்டன உரையாற்றினர். எச்.எம்.எஸ்., சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் பட்டாபிராமன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சவுரிராஜன், எம்.எல்.எப்., மாவட்ட செயலாளர் மனோகரன், தொ.மு.ச., கிருஷ்ணன், ஞானசேகர், வேலு உள்ளிட்ட நிர்வாகிகள், தொழிற் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசின் 3 குற்றவியல் திருத்த சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும், மத்திய நிதி அமைச்சரிடம், தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.