/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி முகாம்
/
கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி முகாம்
கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி முகாம்
கிராம வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : ஆக 04, 2024 12:06 AM
வானுார்: வானுார் தாலுகாவில் நடப்பாண்டில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடகம்பட்டு கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஆத்மா திட்ட தலைவர் குப்பன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, பயிர் வாரியாக புதிய ரகங்கள் வெளியீடு, நவீன வேளாண் கருவிகள் பயன்பாடு மற்றும் புதிய நவீன தொழில் நுட்பங்களை கையாளுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு வருகை தந்த விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை இனத்தின் கீழ் மானிய விலையில் நெல் நுணணுாட்ட உரம், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் வழங்கப்பட்டது.
வேளாண்மை அலுவலர் ரேவதி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி, சந்திரசேகர் செய்திருந்தனர்.