/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளர்களுக்கு பயிற்சி முகாம்
/
தொழிலாளர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : மார் 08, 2025 03:55 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல் கேட்டில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வாரத்தையொட்டி, பயிற்சி முகாம் நடந்தது.
தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வாரம் கடந்த 4ம் தேதி முதல் வரும் 11ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி, டோல்கேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடல்நலம், சுற்றுச் சூழல் பாதிக்காதவாறு பணிபுரிய விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
டோல் கேட் திட்ட மேலா ளர் சதீஷ்குமார் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார். பி.ஆர்.ஓ., தண்டபாணி வரவேற்றார். சண்டிகரிலிருந்து சேவ்கவர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் பிந்தியா பயிற்சி அளித்தார்.
பாதுகாப்பு மேலாளர் மனோஜ்குமார், துணை மேலாளர்கள் சொர்ணமணி, அமிர்தலிங்கம் உட்பட டோல் பிளாசா தொழிலாளர்கள் பங்கேற்றனர்.