/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
/
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மார் 28, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்த பயிற்சிக்கு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கி, பயிற்சி அளித்தார். இதில், ஓட்டுச்சாவடியில் பயன்படுத்த வேண்டிய படிவங்கள், விதிமுறைகள், ஓட்டளிப்பு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தாசில்தார்கள் நாராயணமூர்த்தி, சங்கரலிங்கம், சரவணன், தேர்தல் துணை தாசில்தார் ேஷாபா லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

