/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறிமுதல் மதுபாட்டில்களை விற்ற ஏட்டுகள் டிரான்ஸ்பர்
/
பறிமுதல் மதுபாட்டில்களை விற்ற ஏட்டுகள் டிரான்ஸ்பர்
பறிமுதல் மதுபாட்டில்களை விற்ற ஏட்டுகள் டிரான்ஸ்பர்
பறிமுதல் மதுபாட்டில்களை விற்ற ஏட்டுகள் டிரான்ஸ்பர்
ADDED : ஜூன் 27, 2024 02:12 AM
விழுப்புரம்:திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தில், முருகானந்தம், மகேஷ், தினகரன் ஆகியோர் ஏட்டுகளாக பணிபுரிந்தனர்.
இவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன், பைக்கில் மது பாட்டில்களை கடத்தி வந்த மூன்று வாலிபர்களை பிடித்து, 10,000 ரூபாய் மதிப்பிலான உயர் ரக மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த வாலிபர்களை போலீசார் மிரட்டி, 5,000 ரூபாய் மாமூல் வாங்கியதோடு, பறிமுதல் செய்த மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்றதாக அவர்கள் மீது புகார் கூறப்பட்டது. இந்த தகவல், விழுப்புரம் எஸ்.பி.,யின் கவனத்திற்கு சென்றது.
விசாரணைக்கு பின் மூன்று ஏட்டுகளையும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., தீபக் சிவாச் நேற்று உத்தரவிட்டார்.