ADDED : ஆக 10, 2026 07:12 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம், மாம்பழப்பட்டு சாலையில், ரயில்வே கேட், பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் 200 கே.வி.ஏ., மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில், அதிகம் மின்னழுத்தம் காரணமாக, நேற்று மதியம் திடீரென வெடித்து, அதிலிருந்த கொதிக்கும் இன்சுலேட்டர் ஆயில் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்தில் பக்கத்தில் மூடியிருந்த கடைகளின் பெயர் பலகை சைன் போர்டுகளும் எரிந்தன.
தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் மதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மின்துறை ஊழியர்கள் விரைந்து வந்து, மின்சாரத்தை துண்டித்து, டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
