/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாலிபர்களை தாக்கும் திருநங்கைகள் வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு
/
வாலிபர்களை தாக்கும் திருநங்கைகள் வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு
வாலிபர்களை தாக்கும் திருநங்கைகள் வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு
வாலிபர்களை தாக்கும் திருநங்கைகள் வலைதளத்தில் வைரலானதால் பரபரப்பு
ADDED : ஆக 15, 2024 05:30 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் வாலிபர்களை திருநங்கைகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ரைவலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு இரு வாலிபர்கள், அவ்வழியே சென்ற திருநங்கை ஒருவரை கிண்டல் செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக, அந்த திருநங்கை, வாலிபர்களிடம் கேட்ட போது இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து அங்கு வந்த மற்ற திருநங்கைகள் ஒன்று சேர்ந்து அந்த இரு வாலிபர்களை சராமரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ வாட்ஸ் அப்பில் நேற்று வைரலாகியது. இந்த பிரச்னை சம்பந்தமாக விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு வீடியோவும் 'லீக்'
அதே போல், விழுப்பரம் அருகே அய்யூர் அகரம் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.00 மணிக்கு காரில் வந்த நபர் ஒருவர், பங்க் ஊழியரிடம் காரில் காற்றுபிடிக்க கூறியுள்ளார். அப்போது, அவர் மற்றொரு வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய போது, பொறுமையாக இருங்க, பெட்ரோல் போட்டு விட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி விட்டு, காரை கொண்டு சென்றுள்ளார்.
இந்த வீடியோ பதிவாகிய சி.சி.டி.வி., காட்சியும் வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலாகியுள்ளது. இது சம்பந்தமாகவும், விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.