/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பொறுப்பேற்பு
/
போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 18, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனராக குணசேகரன் பொறுப்பேற்று கொண்டார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மேலாண் இயக்குனராக ராஜ்மோகன் பணிபுரிந்தார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனராக பணிபுரிந்த குணசேகரன், நேற்று விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனராக பொறுப்பேற்று கொண்டார்.
இவருக்கு, அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.