/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தனியார் ஆலைக்கு கரும்பு கொண்டு சென்றால் நடவடிக்கை பாயும்: வருவாய் அதிகாரி எச்சரிக்கை
/
தனியார் ஆலைக்கு கரும்பு கொண்டு சென்றால் நடவடிக்கை பாயும்: வருவாய் அதிகாரி எச்சரிக்கை
தனியார் ஆலைக்கு கரும்பு கொண்டு சென்றால் நடவடிக்கை பாயும்: வருவாய் அதிகாரி எச்சரிக்கை
தனியார் ஆலைக்கு கரும்பு கொண்டு சென்றால் நடவடிக்கை பாயும்: வருவாய் அதிகாரி எச்சரிக்கை
ADDED : ஜூலை 23, 2024 11:08 PM
விழுப்புரம் : செங்கல்ராயன் கூட்டுறவு சக்கரை ஆலைக்கு கரும்புகளை விற்காமல் தனியார் ஆலைக்கு கொண்டு சென்றால் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமீனாட்சி எச்சரித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முழு அரவைக்கு ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சத்து 16 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்புகள் தேவைப்படுகிறது. இந்தாண்டு வறட்சி மற்றும் நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் கரும்பு உற்பத்தி பாதித்து, வரும் அரவை பருவத்திற்கு கரும்பு இருப்பு 2 லட்சத்து 75 ஆயிரம் மெட்ரிக் டன்கள் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதிவு மற்றும் பதிவில்லாத கரும்பை ஆலையைச் சுற்றியுள்ள தனியார் ஆலையாளர்கள், இடைத்தரகர்கள் மூலம் கரும்பை சட்டத்திற்கு புறம்பாக தனிச்சையாக வெட்டி கடத்துகின்றனர்.
இதே நிலை நீடித்தால் இந்த ஆலையின் அரவைக்கு தேவையான கரும்பு மேற்கொண்டும் குறையும் நிலை ஏற்படும்.
இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆலையின் விவகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து பதிவு மற்றும் பதிவில்லாத கரும்பை இதர ஆலைகளுக்கு எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு எடுப்பது நிறுத்தப்பட வேண்டும்.
தவறினால் வருவாய் வசூல் செய்யும் பிரிவின் கீழ், ஆலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு எடுத்து செல்லும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆலையின் அங்கத்தினர்கள் கரும்புகளை தனியார் சர்க்கரை ஆலைக்கு விற்காமல் செங்கல்ராயன் கூட்டுறவு சக்கரை ஆலைக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.