ADDED : ஆக 10, 2024 05:25 AM

அ நிறம் | அளவு
திண்டிவனம்: திண்டிவனம் மறைந்த பால்பாண்டியன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள நியூ பாண்டியன் மெட்டல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர்ஸ் கடையின் உரிமையாளர், மணிலா நகர் அரிமா சங்கத்தின் நிர்வாகி சுரேஷ் தந்தை பால்பாண்டியன் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதையொட்டி மறைந்த பால்பாண்டியன் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் மணிலா நகர் அரிமா சங்க வட்டார தலைவர் செந்தில்குமார், மாவட்ட தலைவர்கள் தமிழமுதன், பாஸ்கர், மூர்த்தி, சங்கத் தலைவர் ராஜா, செயலாளர் முருகன், பொருளாளர் மணிகண்டன், உறுப்பினர்கள் பிரகாஷ் சந்த், சங்கர் மற்றும் கடை ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
